Header Ads



டிக்கெட்டுக்களின் விலை குறைந்தது


ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் 1,000 ரூபாவா குறைக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 9, 12, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் ஆர். பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் லோவர் பிளொக் C மற்றும் D ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை 1,000 ரூபாய்க்கு ரசிகர்கள் வாங்க முடியும் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


No comments

Powered by Blogger.