Header Ads



இலங்கையின் தீவிர ஆதரவாளரை சந்தித்த ரோஹித் ஷர்மா




16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இலங்கை வந்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா இலங்கை கிரிக்கட் அணியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான பேர்சி அபேசேகரவை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்று உள்ளார்.


இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் இரசிகரான கயான் சேனாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பேர்சி அபேசேகரவின் இல்லத்திற்கு ரோஹித் ஷர்மா சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த சில வாரங்களுக்கு முன் பேர்சி அபேசேகர இறந்து விட்டதாக பொய்யான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த நிலையில் அவர் நலமாக உள்ளதாக ஒரு வீடியோ பதிவு மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


இஷ்ரத் இம்தியாஸ்

No comments

Powered by Blogger.