புனித குர்ஆன் அவமதிப்பு, நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 11ஆம் திகதி மீள அழைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று -04- உத்தரவிட்டார்.
புனித குர்ஆன் தொடர்பான தவறான மற்றும் போலியான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லையென பொலிஸாரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், பிணையில் உள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார உள்ளிட்ட பிரதிவாதிகள் குழு இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தது
Post a Comment