யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி A/L பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம்
இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவில் தந்தையை இழந்த டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
இன்றைய தினம் (04-09-2023) மாலை கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவி வர்த்தக பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
குறித்த மாணவி வர்த்தக பிரிவில் பொருளியல், வணிகம், கணக்கியல் ஆகிய பாடங்களில் 3 ஏ சித்தியினையும் ஆங்கிலம் பாடத்தில் எஸ் பெறுபேற்றையும் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 728 வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
Post a Comment