Header Ads



ஒரு வைத்தியரை உருவாக்க 4 மில்லியன் செலவாகின்றது, அவர்கள் நாட்டைவிட்டு ஓடுவது நியாயமா..?


ஒரு வைத்தியரை உருவாக்க இந்நாட்டின் வரி செலுத்துபவர்கள் அண்ணளவாக 4 மில்லியன் ரூபாவை செலவு செய்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று -07- தெரிவித்துள்ளார்.


ஒரு மருத்துவ மாணவர் பல்கலைக்கழகத்தில் 5 வருட கல்வியை நிறைவு செய்ய, மக்கள் 4,092,915 ரூபாவை செலவு செய்ய வேண்டியுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


” இது மாதத்திற்கு 68, 215 ரூபாய்” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.


அதேபோல் ஒரு பொறியியல் மாணவருக்காக 2.1 மில்லியன் ரூபாயும் முகாமைத்துவ மாணவர்களுக்காக 1 மில்லியன் ரூபாயும் கலைப்பீட மாணவருக்கு 1.3 மில்லியன் ரூபாவையும் வரி செலுத்துபவர்கள் செலவழிப்பதாக அவர் தெரிவித்தார்.


கேகாலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறும் சம்பவம் தொடர்பில் குறிப்பிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.