சனல் 4 வீடியோ - பாராளுமன்றத்தில் இன்று மனுஷ கூறிய தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்-4 ஊடகம் தகவல்களை வெளியிட்டவுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் இலங்கை அரசியல்வாதிகளை மேற்கோள் காட்டியும் சனல்-4 சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பிலான காணொளி வெளியிடப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த சேனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment