Header Ads



எனது குடும்பத்துடன் சனல் 4 க்கு வரலாற்றுப் பகை - வீடியோக்களை நீக்கியது ஏன்..?


ராஜபக்ஷேக்களுடன் செனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் செனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால்  அதை எதற்காக அவர்கள் தமது இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டுமென இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.


பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக ராஜபக்ஷேக்களைப் பழி வாங்குவதற்கான இன்னுமொரு முயற்சியாக இது இருக்கலாம், அல்லது சிலரின் அரசியல் நோக்கங்களைத் திருப்திப்படுத்துவதற்காக செனல் 4 புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என நாமல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


2009 ஆம் ஆண்டு யுத்த முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் எனது குடும்பத்துடனும் எனது தந்தை மற்றும் ராஜபக்ஷ என்ற பெயருடனும் செனல் 4 வரலாற்றுப் பகையைக் கொண்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது, அது அரசியல் மயமாக்கப்படுவது சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்குத் தடையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.