4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
நான்கு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட முதலாம் நிலை எச்சரிக்கை இன்று -02- நண்பகல் வரை அமுலில் இருக்கும்.
இதன்படி, காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, புளத்சிங்கள, வலல்லாவிட்ட மற்றும் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, ருவன்வெல்ல, யட்டியான்தோட்டை, ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் உள்ள பகுதிகள் மற்றும் இரத்தினபுரிமாவட்டத்தில் இரத்தினபுரி, எஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச செயலகப் பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment