Header Ads



ஈஸ்டர் தாக்குதல் - ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானங்கள்


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூல காரணமாக ஒருவர் செயற்பட்டதாக ,முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு விசாரணைகள் முடிவடைந்தவுடன், இறுதித் தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்னர், பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. மற்றொரு கண்துடைப்பும் பம்மாத்தும்.

    ReplyDelete

Powered by Blogger.