Header Ads



3 ஆவது நாளாக தேடியும், தங்கம் கிடைக்கவில்லை


முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை தோண்டியெடுக்கும் நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.


முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், மூன்று நாட்களாக முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரை பகுதியில்  அகழ்வுப்பணி  முன்னெடுக்கப்படுகின்றது. 


2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் பாரியளவிலான வெடிபொருட்களும் தங்கம் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களும்  புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கருதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையிலும் தொல்பொருள் திணைக்களம், கிராம சேவையாளர், பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர், பிரதேச செயலக அதிகாரிகளின் முன்னிலையிலும் தொடர்ச்சியாக அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 


மூன்று நாட்களாக  மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில்  இன்று மாலை 4.30 மணி வரை  எந்த வித தடயப் பொருட்களும் கிடைக்கவில்லை என   முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.