Header Ads



தாதியர் பயிற்சிக்காக 3500 பேர் தேவை (முழு விபரம் இணைப்பு)


தாதிப் பயிற்சிக்காக சுமார் 3500 மாணவர்களை உள்வாங்குவதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.


அதற்கமைய 2019ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதீக விஞ்ஞானப் பாடத்தைக் கற்று கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளிடமிருந்து தாதிப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


அதற்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (15)  முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.


மேலதிக தகவல்களுக்காக வெள்ளிக்கிழமை 15ஆம் திகதி அரசாங்க வர்த்தமான மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk இற்குள் பிரவேசித்துப் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை,   தாதியர் கற்கைநெறியை பூர்த்தி செய்த ஆயிரம் தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.


தாதியர் கற்கைநெறியை நிறைவு செய்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வரவு -செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.