Header Ads



லிபியாவில் புயலுடன் கடும் மழை - 3000 பேர் உயிரிழப்பு, பல ஆயிரம் பேரை காணவில்லை (படங்கள்)


கிழக்கு லிபியாவில் டேனியல் புயல் தாக்கியதில் 3,000 பேர் வரை இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர்.


இரண்டு அணைகள் உடைந்த பின்னர் டெர்னா நகரம் மிக மோசமான அழிவை சந்தித்துள்ளது, ஆரம்பகால இறப்பு எண்ணிக்கை 3,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.


செஞ்சிலுவைச் சங்க அதிகாரி டேமர் ரமதான் கூறுகையில், வெள்ளத்தில் சிக்கி சுமார் 10,000 பேர் காணாமல் போயுள்ளனர்.


இறப்பு எண்ணிக்கை "பெரியது" என்றும், வரும் நாட்களில் ஆயிரக்கணக்கில் உயரும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.


குறிப்பாக கனமழை காரணமாக டெர்னா பகுதியில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. சில அணைகள் இடிந்து விழுந்தன.


இதனால் டெர்னா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அணைகள் இடிந்ததால் வெளியேறிய நீர் குடியிருப்புகளை அடித்துச் சென்றது.


இரவு நேரத்தில் இந்த கோர சம்பவம் நடந்ததால் தூங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.


குடியிருப்பு பகுதிகளில் 10 அடி உயரத்துக்கு வெள்ள நீர் சூழ்ந்தது. ஏராளமான வீடுகளும் அடித்து செல்லப்பட்டன. இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


ஆயிரக்ணக்கானோர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களின் எண்ணிக்கை 5000 முதல் 6000 வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


டெர்னா பகுதியில் திரும்பும் பகுதிகளில் எல்லாம் உடல்கள் கிடப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் அவசரக் குழுவின் உறுப்பினருமான Hichem Chkiouat தெரிவித்துள்ளார்.


வெள்ளம் அடித்து செல்லப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் பாழடைந்த கட்டடங்களை போல் உள்ளன. ஏராளமான கார்களும் சேதமடைந்துள்ளன.


டெர்னா நகரத்தின் 25 சதவீத பகுதி மாயமாகியுள்ளதாகவும் அமைச்சர் Hichem Chkiouat தெரிவித்துள்ளார். தேடுதல் பணி மற்றும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. லிபியா புயல் காரணமாக வரலாறு காணாத அழிவை சந்தித்துள்ளதால் அதிகாரிகள் தீவிர அவசர நிலையை அறிவித்துள்ளனர். பாடசாலை மற்றும் கடைகள் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






No comments

Powered by Blogger.