திடீர் தலைவலியினால் மூளைச்சாவடைந்து, உயிரிழந்த மாணவிக்கு 3 A
திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 ஏ பெறுபேறுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.
அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று முதலிடம் பிடித்தார்.
இதேவேளை இவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம்,கல்லீரல்,கண்,சிறுநீரகம் மற்றும் நுரையீரல் என்பன ஏழு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இன்றுவரை அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.
Post a Comment