Header Ads



3 A சித்தி பெற்றவர்கள், பற்றிய அறிவிப்பு


2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் 9,904 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


இதேவேளை பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவியரின் 63. 3 விதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் தகுதி கிடைக்க பெற்றுள்ளது.


உயிரியல் பிரிவில் 817 பேரும், பௌதிக விஞ்ஞான பிரிவில் 1068 பேரும், வர்த்தகப் பிரிவில் 4198 பேரும், கலை பிரிவில் 3622 பேரும், பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் 90 பேரும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் 73 பேரும் இவ்வாறு மூன்று ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.


கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு 263933 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர் எனவும் இதில் 166938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை 2758 மாணவ மாணவியர் 3 பாடங்களிலும் சித்தி எய்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இந்த ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர  பரீட்சையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


மேலும் எதிர்வரும் ஆண்டு முதல் பரீட்சைகளை உரிய நேரத்திற்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.