Header Ads



தொலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்த 2 மாணவர்கள் கைது


கைபேசிகள் களவாடப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் பயணிப்போரிடம் கைத்தொலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று மாலை (07) யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.


யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


சந்தேக நபர்கள் இருவரும் இன்று (08) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.