IMF இன் 2 வது கடன் தொகை நிறுத்தம், அரசாங்கத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் தேர்தலை நடத்து
பிரபஞ்சம் பஸ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாலயத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வழங்கும் நிகழ்வில் இன்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையிலும் நாட்டின் தலைவர்கள் மாதந்தோறும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றும்,அண்மைய காலத்தில் ஐக்கிய நாடுகள் சபை,கியூபா, ஜேர்மனி மற்றும் பிற நாடுகளுக்கு இவ்வாறு அவர் சென்றார் என்றும்,ஜனாதிபதி ஜேர்மனி சென்ற பிறகு ஐ.எம்.எப் இரண்டாவது கட்ட கடன் வசதியை வழங்குவது தள்ளிப்போகும் என்று கூறும்போதும் நிதியமைச்சராக உள்ள ஜனாதிபதி நாட்டில் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களில்,இரசானய உரக் கொள்கையைக் கொண்டு வந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்தவர்கள்,மொட்டுவின் அமைச்சுப் பதவி இல்லாத எம்.பி.க்கள்,தோட்ட மக்களின் வாக்குகளால் வந்து தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத எம்.பி ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும்,இது அரசியல் இலஞ்சம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த அனைத்து பயணங்களுக்கான அனைத்து செலவுகளையும் நாட்டின் 220 இலட்சம் மக்களின் பணத்திலிருந்தே செலவளிக்கின்றனர் என்றும்,நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஏற்படும் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் ஈடுசெய்யப்படுகின்றன என்றும்,இந்த தூதுக்குழு விஜயங்களில்,துறை சார் நிபுணர்களை அழைத்துச் செல்லாது, அமைச்சர்களை அழைத்துச் சென்று அவர்களை சந்தோசப்படுத்துவதையே தற்போதைய ஜனாதிபதி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று நமது நாட்டில் மிகவும் பரிதாபகரமான சூழல் நிலவுகிறது என்றும்,நாட்டை ஆளும் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு வந்து நாட்டை வங்குரோத்தாக்கி விட்டதாகவும்,இதையெல்லாம் தாண்டி மக்களுக்கு ஏதேனும் வழங்க வேண்டும் என்றும்,வரிச்சுமையினால் மக்கள் அவதியுறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பொருளாதார பெறுகைகளை விரிவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் பதிலாக சுருக்கி வருவதாகவும்,இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளதாகவும், அசாதாரணமான முறையில் மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்து இயல்பு வாழ்க்கை கூட அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் உணவுப் பாதுகாப்பு இல்லை என்றும்,
65 சதவீதம் பேர் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,
3 வேளை சாப்பிட்ட மக்கள் இப்போது 2 வேளை சாப்பிடுகிறார்கள் என்றும், இதனால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவ்வாறே,மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும்,அதிக விலைக்கு மருந்துகள் வழங்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிலை இருந்தும் அரசாங்கம் மோசடி, இலஞ்சம்,பொய்,ஊழல் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது என்றும்,தரக்குறைவான மருந்துகளை கொண்டு வருவதாகவும்,இதனால்,பலர் தங்களிடம் உள்ள தங்க பொருட்களை அடகு வைத்து, வீடு,சொத்துக்கள்,வாகனங்களை கூட விற்று பிள்ளைகளை படிப்பிக்கவும்,வாழ்க்கையை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நாட்டின் தவறான பொருளாதாரக் கொள்கையே இதற்கு பிரதான காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கத்தின் கொள்கை பொருளாதாரத்தை சுருக்குவதே என்றாலும் பொருளாதாரத்தை விரிவாக்குவதே நடக்க வேண்டியது என்றும்,இது மேற்கொள்ளப்படாமையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டும்,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வீழ்ச்சியடைந்தும், சுயதொழில் கூட வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போட்டி முறை தவிர்ந்த டெண்டர் முறையி்ல் அவசர கொள்முதல் செய்யப்பட்டு,
தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வந்து, அவற்றிலிருந்தும் கொமிஸ் கூட பெறப்படுவதாகவும்,இவ்வாறு கொள்ளையடித்து பெரும் செல்வந்தர்களுக்கு வரம்பற்ற வரிச்சலுகைகளை வழங்கி,வரி அறவீடும் கூட சரியாக நடக்கவில்லை என்றும்,நட்பு வட்டார முதலாளித்துவவாதிகள் வரி செலுத்தத் தவறிவிட்டனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தர்.
மதுபானம் விற்பனை செய்யும் இரண்டு நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் ரூபா வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றக் குழுவுக்குக் அரசாங்க நிறுவன அதிகாரிகள் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு எப்படி வரிச்சலுகை வழங்கப்பட்டது என்று கேட்டபோது “முதலீட்டாளர்களிடம் கேட்டு தெரிவிப்பதாக” கூறியதாகவும்,இது வெட்கக்கேடான பதில் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
அரசின் வருவாயை அதிகரிக்க வரி விதிப்பு பலனளிக்கவில்லை என்றும்,நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமே அரச வருவாய் அதிகரிக்கும் என்றும்,பொருளாதார வளர்ச்சியால் தான் நாட்டின் வருமானம் அதிகரிக்கப்படும் என்றும்,இதன் மூலம் அரச வருமானம் அதிகரிக்கும் என்றாலும் தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை அபிவிருத்தியடைய விடாது மக்களின் வாழ்க்கையை சுருக்கி பிரச்சினைகளை தீர்க்க முயல்கிறது என்றும்,பொருளாதார உஸ்தாத்மார்கள் என்று தம்பட்டம் அடித்தாலும் அரசாங்கத்தால் வருமான இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மின்கட்டணம்,நீர் கட்டணத்தை ஒருமுறை அதிகரித்த அரசாங்கம்,மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை அதிகரிக்க தயாராகி வருவதாகவும்,நாட்டு மக்களின் வாழ்வாதாரம் அதலபாதாளத்தில் இருந்தாலும்,மக்கள் கஷ்டப்பட்டாலும்,நாட்டை ஆட்சி செய்பவர்கள் வெளிநாட்டு விஜயங்கள் சென்று சுகபோகங்களை அனுபவித்துவருகின்றனர் என்றும்,220 இலட்சம் மக்கள் மீது இரக்கமோ,
கருணையோ,பரிவே இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்றும்,மக்கள் மீது நாளுக்கு நாள் வரி விதித்து நாட்டை ஒடுக்கி ஆட்சியாளர் சுகபோகங்களை அநுபவிக்க வேண்டும் என்ற போக்கே அரசாங்கத்திற்கு தேவையாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் தேர்தலை நடத்துமாறும், சகல தேர்தல்களிலும் வெற்றி பெற்று நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் பஸ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை 50 இலட்சம் ரூபா பெறுமதியான 79 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 395,000,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அவ்வாறே,பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் 33 பாடசாலைகளுக்கு 290 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறை உபகரணங்களும்,
மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 1719 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment