சூட்கேஸில் மிதந்த நபரின் கொலை - சந்தேகநபர்கள் அக் 2 வரை விளக்கமறியல்
- Ismathul Rahuman -
சீதுவ, தண்டுகம் ஓயாவில் சூட்கேஸில் மிதந்த நபரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் அக்டோபர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி திருமதி தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டார்.
வெளிநாடு அனுப்புவதாக கூறி 22 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாடு அனுப்பாமல் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே இந்தக் கொலை இடம்பெற்று உள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை நடாத்தியபோது பொலிஸார்
கட்டான பிரதேசத்தில் ரெஸ்டுரண்ட் நடாத்திய கதிரான தெற்கு, கிபுளபிட்டியவத்த ரனசிங்க முதியன்சலாகே சமன்த ருவன்(50 வயது) எனும் வர்தகரையும் அவரின் இரு புதல்வர்களான ரனசிங்க முதியன்சலாகே பசிது நிவர்தன (25 வயது), ரனசிங்க முதியன்சலாகே மலிந்து தேஷான் (23 வயது) அங்கு வேலை செய்யும் மூன்று ஊழியர்களான பொலன்னறுவ, காசியப்பபுர சேமசிங்க பண்டாரநாயக்ககே கருனாநாயக்க, தவுலகல, இந்தவுல்லயைச் சேர்ந்த கானியன்கெதர ருவன் குமார,புஹுல்வெல்ல,கிரிந்த, கொஸ்கஸ்ஹேன கருனாநாயக்ககே சமத் குமார ஆகியோர்களே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் வழக்குப் பொருளாக கொலை செய்த வரை ஏற்றிச் சென்ற WP CBA 9527 இலக்க கார், 4 அடி நீளமான கம்பு கைபற்றப்பட்டுள்ளன.
௧டந்த 11 திகதி கொழும்பில் மிதக்கும் வர்த்தக தொகுதியில் வைத்து சந்தேகநபர்கள் மரணமானவரை கடத்தி கட்டான பிரதேசத்தில் தென்னந் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று அங்குவைத்து தாக்கிதில் இம் மரணம் சம்பவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீதுவ பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டதரணி நெல்சன் குமாரநாயக்க தலைமையில் சட்டதரணிகள் குழு ஆஜராகியது.
சந்தேக நபர்களை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதிபதி தர்ஷிமா பிரேமரத்ன வழக்கை ஒத்திவைத்தார்.
Post a Comment