மக்கள் உறங்கியபோது நிலநடுக்கம் - மொராக்கோவில் 296 பேர் உயிரிழப்பு (படங்கள்)
மொராக்கோ நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 296 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
Post a Comment