Header Ads



வழக்கு நிறைவு - 28 ஆம் திகதி தீர்ப்பு - உடலுறவின் பின் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சு


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளது.


இந்த வழக்கு விசாரணை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சாரா ஹகெட் முன்னிலையில் நடைபெற்றது.


இதன்படி, இது தொடர்பான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் வியாழக்கிழமை (28) வழங்கப்படும் என நீதிபதி சாரா ஹாகெட் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில்இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான்  அச்சமடைந்ததாக தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் (20) அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பதிவு  செய்யப்பட்ட வீடியோவில் தனுஷ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளன.


குறித்த பெண்ணை  அவரது வீட்டில் முத்தமிட்டது மற்றும் அவருடன் உடலுறவு கொண்டது போன்ற விடயங்களை தனுஷ்க ஏற்றுக்கொண்டுள்ளார்.


அதன் பின்னர் அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் குறித்து  தனுஷ்க தெரிவித்துள்ளார்,இந்த உரையாடலின் போது எனது முன்னைய ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஷ்க குறிப்பிட்டுள்ளார்.


அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன். அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் தனுஷ்க குணதிலக பின்னர் அழுவதையும் தனது முகத்தை துடைப்பதையும் காணமுடிகின்றது.


நான் சிரித்துக்கொண்டே முன்னைய ஜென்மத்தில் நான் யார்  என  உன்னால் தெரிவிக்க முடியுமா என கேட்டேன், நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஷ்க குறிப்பிட்டுள்ளார்.


தன்னால் எனது போன ஜென்மத்தை பார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன் எனவும் தனுஷ்க தெரிவித்துள்ளார்.


ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது. அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன். அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார். நான் ஆடையணிந்துகொண்டு முத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் குற்றம்சாட்டியுள்ள பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.