Header Ads



யாழ்ப்பாணத்தில் 250,000 ரூபாவிற்கு மாம்பழம்


யாழ்ப்பாணம் நாகர்கோவில் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பெண் ஒருவர் 250,000 ரூபாவிற்கு மாம்பழம் ஒன்றை ஏலத்தில் கொள்வனவு செய்துள்ளார்.


கடவுளுக்குப் படைக்கும் மாம்பழங்களை, உண்பதற்காக அல்லாமல், மாம்பழத்தை வெள்ளைத் துணியில் சுற்றி, வீட்டின் முன் கதவுக்கு மேலே தொங்கவிடுவதாக தெரியவந்துள்ளது.


கடந்த வாரம் வவுனியாவிலுள்ள இரண்டு ஆலயங்களில் நடைபெற்ற இவ்வாறான 2 ஏலங்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவிற்கு பக்தர்களால் கொள்வனவு செய்யப்பட்டன.

No comments

Powered by Blogger.