Header Ads



19 கோடி பெறுமதியான கொக்கெய்ன் பிடிபட்டது - எப்படி மறைத்து வைத்துள்ளார்கள் தெரியுமா..?


19 கோடி ரூபா பெறுமதியான 02 கிலோ 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் செவ்வாய்க்கிழமை (12) கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்தில் DHL வளாகத்தில் வைத்து  கைப்பற்ற பட்டது.


இந்த போதைப்பொருள்  ஒரு volleyball வலையின் மேல் மற்றும் கீழ் விளிம்புகளில் கூடுதல் பிளாஸ்டிக் குழாய் செருகப்பட்டு மறைக்கபட்ட நிலையில் கைப்பற்றபட்டுள்ளது.



பிரேசிலில் இருந்து கொழும்பு மருதானை பகுதியில் உள்ள முகவரிக்கு இந்த போதைப்பொருள் அடங்கிய ஏர் மெயில் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. பார்சலின் உரிமையாளர்கள் இருவர்  கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்திற்கு வரவழைக்கப்பட்டு  கைது செய்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக இருவரையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.