165 ஏக்கர் காணியை கைப்பற்றிய அரசியல்வாதி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பலவந்தமாக கைப்பற்றியதாக கூறப்படும் 165 ஏக்கர் காணியை உடனடியாக வனப் பாதுகாப்பு நாயகத்திடம் கையளிக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வண்ணாத்துவில்லு வீரக்கொடிசோலை வனத்திற்கு சொந்தமான 165 ஏக்கர் காணியையே இவ்வாறு ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனப்பாதுகாப்பு நாயகத்தின் சார்பில் புத்தளம் வனப்பாதுகாப்பு பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளளது.
Post a Comment