15 வயது சிறுமி வன்புணர்வு - 17 சிறுவன் கைது!
15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய், தந்தை இல்லாத குறித்த சிறுமி பாட்டியுடன் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெமட்டபிட்டிய, லுனுவில பிரதேசத்தில் வசிக்கும் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த சிறுவன், பெயின்டராக தொழில் செய்து வருகிறார்.
தனது பேத்தி காணாமல் போன நிலையில், லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருப்பதாக 71 வயதான பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment