Header Ads



1,100 ரூபாய்க்கு ஒருகிலோ கோழி இறைச்சி


கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.


தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.


'வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின் சில இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. 


சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது.


டிசெம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என நம்புகிறோம். அதன்படி விலை மேலும் குறையும்.


இலங்கைக்கு சோளத்தை கொண்டுவந்தால் முழுமையாக உணவுக்கு பயன்படுத்தலாம். அப்போது உற்பத்தி செலவை குறைக்கலாம்” என்றார்.

No comments

Powered by Blogger.