உதயநிதி தலைக்கு 10 கோடி ருபாய் - சாமியார் அறிவிப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அயோத்தியை சேர்ந்த துறவி ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ருபாய் அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாது குறித்த சாமியார் உதயநிதி புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
Post a Comment