பிரபல WWE சாம்பியன் பிரெய் வைட் திடீரென உயிரிழப்பு
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 36 ஆகும். WWE நிறுவனத்தின் தலைமை உள்ளடக்க அதிகாரி Triple H இது குறித்த அறிவிப்பை x சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரெய் வைட் வெளியிடப்படாத உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணம் குறித்து பிரெய் வைட்டின் குடும்பத்தினரும் தகவல் வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரெய் வைட்டின் மறைவிற்கு தி ராக் எனப்படும் டுவைன் ஜோன்சன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து x சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தகவல் அறிந்ததும் மனம் உடைந்துவிட்டதாகவும், வைட் எப்போதும் மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்” எனவும் தெரிவித்துள்ளார்.
வைட் அவரது தாத்தா பிளாக்ஜாக் முல்லிகன், அவரது தந்தை மைக் ரோட்டுண்டா மற்றும் அவரது இளைய சகோதரர் போ டல்லாஸ் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர்.
ரோட்டுண்டா ஒரு பிரபலமான மல்யுத்த ஜாம்பவான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரெய் வைட் 2009ஆம் ஆண்டு முதல் WWE சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகமானார்.
2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாடியிருக்கவில்லை.
பிரெய் வைட் WWE சாம்பியன்ஷிப் போட்டியில், ஒருமுறை WWE சாம்பியன்ஷிப்பையும், இரண்டு முறை யுனிவர்சல் சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளார்.
அவர் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் வரை ஒரு சிறிய இடைவெளி எடுத்து, தி ஃபைண்ட் என்ற புதிய கதாபாத்திரத்துடன் மீளவும் திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment