Header Ads



இத்தாலியின் SLMC மற்றும் MMSC இணைந்து ஏற்பாடு செய்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி

இத்தாலியின் SLMC மற்றும் MMSC அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த Champion கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம்  6ம் திகதி Via Arcangelo Corelli 136 Milano என்ற முகவரியில் அமைந்திருக்கும் Saini விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது .


ஆறு அணிகளைக் கொண்ட 5 ஓவர்களுடனான கிரிக்கட் போட்டியில் ஒவ்வொரு அணியும்  தலா எட்டு வீரர்களுடன் களம் இறங்கியது.


சகல வீரர்களும் ஆரம்பம் முதல் விருவிருப்பாகவும் மிகுந்த உற்சாகத்துடனும்,  விளையாடியதுடன்  குறிப்பாக Brescia Royals இன் ஆட்டம் அதிரடியாக அமைந்திருந்தது.


Monza CHALENGERS அணியினர் அவர்களின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுத்தாடியமை பாரட்டுக்குரியது.


Milano Warriors மற்றும் Milano Riders அணிகள் தனது முழு முயற்சியையும் பிரயோகித்து விளையாடிமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Oggiano Stars மற்றும் Como Legends இன் ஆட்டமும் மிக நேர்த்தியாக இருந்ததுடன் விருவிருப்பாகவும் அமைந்திருந்தது.


Brescia Royals இறுதிப் போட்டியில் Monza Chellangers உடன் விளையாடி வெற்றியை தனதாக்கி  கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.


முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தை Monza Challengers மற்றும் Milano Warriors அணிகள் தனதாக்கிக் கொண்டன.


மேற்படி கிரிக்கெட் போட்டிகளை கண்டு களிக்க அனைவரும் குடும்பம் சகிதம் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.  


குறிப்பாக SLMC ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பங்களிப்பை உள்வாங்கிக்கொள்வதோடு , எமது அடுத்த தலைமுறையினரை சிறந்த முன்மாதிரிகளை காட்டி வழிநடாத்துவதும் அதன் நோக்கங்களில் ஒன்றாகும்.


எல்லாம் வல்ல இறைவன் நமது தூய எண்ணங்களையும் செயல்களையும் பொருந்திக்கொள்வானாக.


ஆமீன்


தகவல் : SLMC தகவல் பிரிவு







No comments

Powered by Blogger.