Header Ads



முஸ்லிம் மீடியா போரத்திற்கு பங்­க­ளாதேஷ் தூதுவர் வாழ்த்து, NM அமீன் நற்பணியை செய்வதாக பாராட்டு


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


பாட­சாலை மாண­வர்­க­ளது ஊடக அறிவை மேம்­ப­டுத்­து­வ­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாட­ளா­விய ரீதியில் ஆற்­றி­வரும் பங்­க­ளிப்பு பாராட்­டுக்­கு­ரி­யது என இலங்­கையின் பங்­க­ளாதேஷ் உயர்ஸ்­தா­னிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம் தெரி­வித்தார்.


மாவ­னெல்லை பது­ரியா மத்­திய கல்­லூ­ரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், கல்­லூ­ரியின் பழைய பழைய மாணவிகள் சங்­கம் நடாத்­திய 74 ஆவது ஊடக கருத்­த­ரங்கின் சான்­றிதழ் வழங்கும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே உயர் ஸ்­தா­னிகர் இவ்­வாறு தெரி­வித்தார்.


போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் கல்­லூரி அதிபர் ஏ.எல்.அப்துல் ரகுமான் ஆகி­யோ­ரது கூட்டுத்தலை­மையில் இந்த நிகழ்வு இடம் பெற்­றது.

110 மாண­வர்கள் மற்றும் ஊடகம் போதிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு ஒரு நாள் விரி­வு­ரைகள் நடத்­தப்­பட்­டன.


கலா­நிதி எம்.ஐ.எம். அமீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் பொன்­னாடை போர்த்தி நினை­வுச் சின்னம் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டனர்.


இங்கு பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றிய பங்­க­ளாதேஷ் உயர்ஸ்­தா­னிகர் மேலும் கூறி­ய­தா­வது,


ஊட­கங்­களை எதிர்­நோக்­கு­வது மிகவும் முக்­கி­ய­மா­னது. இத­னாலே முஸ்லிம் சமூகம் என்ன செய்­கின்­றது என்­பதை மற்ற சமூ­கங்கள் அறிந்து கொள்­ளலாம். பது­ரியா கல்­லூ­ரியில் புறம்­பான ஊடகக் கழகம் ஒன்று அர்ப்­ப­ணத்­துடன் செயற்­ப­டு­வதை அறிந்து மகிழ்ச்சி அடை­கின்றேன்.


நாட்டில் எத்­தனை பாட­சா­லை­களில் இவ்­வா­றான ஊடகக் கழ­கங்கள் இருக்­கின்­றது என்­பது எனக்குத் தெரி­யாது. மாண­வர்­க­ளுக்கு ஊடக அறிவை ஊட்டும் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பணி பாராட்­டுக்­கு­ரி­யது.


முஸ்லிம் மீடியா போரம் நாட­ளா­விய ரீதியில் இப்­ப­ணியில் ஈடு­பட்டு வரு­கின்­றது. மாண­வர்­க­ளுக்கு ஊட­கத்தின் முக்­கியம் பற்றி அறி­வூட்­டு­வதில் முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் சேவை பாராட்­டுக்­கு­ரி­யது. இன்­றைய கருத்­த­ரங்கில் ஊட­கத்தின் நுட்­பங்­களை மாண­வர்­க­ளுக்குப் போதித்­துள்­ளார்கள். முஸ்லிம் மீடியா போரம் இவ்­வா­றான ஊடகக் கருத்­த­ரங்­கு­களை தொடர்ந்தும் நடத்தி வரு­கின்­றார்கள். அந்த முயற்­சிக்கு தலைமை தாங்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஒரு நல்ல பணியை செய்து வரு­கின்றார். அவர் எங்­க­ளுடன் நெருங்கிப் பழ­கு­கின்றார். ஏனைய நாட்டு தூது­வர்­க­ளி­டமும் அவர் நெருங்­கிய தொடர்­பு­களை வைத்­தி­ருக்­கின்றார். முஸ்லிம் மீடியா போரம் மாண­வர்­களின் ஊடக அறிவை மேம்­ப­டுத்­து­வ­தற்கு எடுக்­கப்­படும் முயற்­சி­க­ளுக்கு எமது ஆத­ரவு என்றும் கிடைக்கும் என்றார்.


தூது­வ­ரினால் ஊடகக் கழக மாண­வர்­க­ளுக்கு சின்னம் வழங்கி கௌரவம் வழங்­கப்­பட்­டது.

No comments

Powered by Blogger.