கிரிக்கெட்டில் பாரிய ஊழல், LPL இலும் மோசடி - உயர் அதிகாரியின் சொத்து விபரங்களை பாருங்கள்
2011 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோற்கவில்லை என்றும் காட்டிக் கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அப்போதிருந்த தேர்வுக் குழுவின் உயர் அதிகாரியொருவரின் 2013 ஆம் ஆண்டின் சொத்து விபரங்களை ஆராய்ந்தால் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் தொடர்பான சபைஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்மேலும் தெரிவிக்கையில்,
2011 ஆம் ஆண்டின் உலகக் கிண்ண போட்டியில் நாங்கள் தோல்வியடையவில்லை. காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளோம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இப்போதும் இருக்கின்றேன். இதற்கு தேவையான சாட்சிகள் உள்ளன.
அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2011 காலப்பகுதியில் தேர்வுக் குழுவில் இருந்த உயர் அதிகாரியின் 2013 சொத்து விபரங்களை எடுத்துப் பார்த்தால் அவை சிக்கும்.
இதேவேளை போட்டி காட்டி கொடுப்புகள் இப்போதும் நடக்கின்றன. கடந்த காலங்களில்vகாலியில் நடந்த சம்பவங்கள் அதனை காட்டுகின்றன. இதன்படி விளையாட்டுத்துறையில் பெரும் ஊழல் மோசடிகள் உள்ளன. அது தற்போதைய எல்.பி.எல் வரையில் வந்துள்ளன” என்றார்.
Post a Comment