Header Ads



சூரியனை ஆராயும் ஆதித்யா L1 - விண்ணில் செலுத்த இந்திய விஞ்ஞானிகள் திட்டம்


சந்திரனை தொடர்ந்து சூரியனை ஆராயும் முனைப்பில் செப்டம்பரில் ஆதித்யா L1 விண்கலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளனர்.


சந்திரயான்-3 திட்டம் ஒரு பக்கம் வெற்றி பெற்றுள்ள நிலையில், சந்திரனுக்கு அடுத்து சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்துள்ளது.


இதற்கான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா L1 என்ற விண்கலனை வெற்றிகரமாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது.


சூரியனை ஆய்வு செய்யும் இந்த ஆதித்யா திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முறையாக கருத்துகள் ஆலோசிக்கப்பட்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.


தற்போது அது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.


சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா L1 விண்கலம் தற்போது தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.


மேலும், சில நாட்களில் விண்கலம் ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு அதன்பின் செப்டம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரொக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் ஹாலோ ஆர்பிட் எனப்படும் பூமியிலிருந்து சுமார் 15 இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இடத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த விண்கலம் 120 நாட்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.