ஆங்கிலம் தெரியாததால் அநுரகுமாரவுக்கு பதிலாக, ஹரிணியா ஜனாதிபதி வேட்பாளர்..? மறுக்கிறது JVP
கடந்த தடவை ஜனாதிபதி வேட்பாளராக அனுர போட்டியிட்டார் எனவும், மீண்டும் ஒருமுறை அவரையே தேர்தலில் களம் இறக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அனுர திஸாநாயக்கவால் ஆங்கில மொழி பேச முடியாத காரணத்தினால் ஜனாதிபதி வேட்பாளராக ஹரிணி அமரசூரியவை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருவதாக ஊடகவியலாளர் வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது ஓர் இழிவான பிரச்சாரம் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் அனைவரும் ஆங்கில மொழி தெரிந்தவர்கள். எனினும் அவர்களால் நாட்டுக்கு என்ன கிடைத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆட்சியாளர்களே நாட்டை என்று இல்லாமல் செய்துள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ஆங்கிலம் தெரியுமா? ஜப்பான் மொழி தெரியுமா? சீன மொழி தெரியுமா? என்பது அல்ல பிரச்சினை.
உண்மையில் அவருக்கு அரசியல் தெரியுமா நாட்டை நேசிக்கின்றாரா? நாட்டை கட்டி எழுப்பக்கூடிய அர்ப்பணிப்பு உள்ளதா? போன்ற விடயங்களே முக்கியமானது.
மொழி தொடர்பான பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment