அமைச்சருக்கும், JVP க்கும் திருட்டு உறவு - துமிந்த குற்றச்சாட்டு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் ஐரோப்பிய தீவுகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தீவுகளில் அமைச்சர் டிரான் அலஸ் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் நன்மையை தேசிய மக்கள் சக்தியினரே அனுபவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் இரகசியமாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் பாரியதொரு சூழ்ச்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் , இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி விளக்கம் தெரிவிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான இளைஞர் அமைப்புக்கள் அடக்குமுறைகளை முன்னெடுப்பதாக துமிந்த நாகமுவ மேலும் குற்றச்சாட்டு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment