இலங்கை அடைந்த முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வரும் IMF பிரதிநிதிகள்
இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதியின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதரவுள்ளது.
இந்த பிரதிநிதிகள் குழுவினர் செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, பல இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
ஜூலை மாத இறுதியளவில் இந்த இலக்குகளில் 35 வீதமானவற்றை மாத்திரமே இலங்கை நிறைவேற்றியிருந்ததாக Verite Research நிறுவனம் அண்மையில் வௌியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
முன்னேற்றம் பிரமாதம். தியவன்னாவையிலுள்ள மந்தி(ரி)கள் மன்றத்துக்குச் சென்று அத்தனை மந்திகளின் வௌிநாட்டு வங்கிக்கணக்குகளையும் உள்நாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருக்கும் வௌிநாட்டுச் செலாவணிக்கணக்குகளின் வங்கியில் கடந்த வருடங்களில் மந்திகளின் பெயரில் வைப்புச் செய்யப்பட்ட தொகைகளைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான மில்லியன் டொலர்களைத் தாண்டியிருக்கும். அந்த வகையில் அபாரத முன்னேற்றம். பொது மக்கள் எப்பவோ படுகுழியில் தள்ளப்பட்டு வி்ட்டார்கள்.
ReplyDelete