இரும்புகளை திருடும் ராஜாங்க அமைச்சர் - CID யில் முறைப்பாடு
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (09) இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் பெரேரா மற்றும் முன்னாள் தலைவர் காமினி ஏக்கநாயக்க ஆகியோரினால் இது தொடர்பான முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment