Header Ads



CCTV கமராக்களை பிடுங்கி விட்டு 25 பவுண் நகைகளும், பணமும் திருட்டு


யாழ்ப்பாணம் - பலாலி, தெற்கு வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 25 பவுண் நகைகளையும், 40,000 ருபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.


இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம் பெற்றுள்ளது.


காலை 10 மணிக்கு 11 மணிக்கு இடையில் வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்ற போது வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகளையும் 40,000 ரூபா பணமும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த வீட்டுக்கு வந்த தடவியல் பொலிஸார், கைரேகை நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.


மோப்ப நாயின் உதவியுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது சந்தேக நபர்களின் கைவிரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதேவேளை திருட்டு நபர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர்.


மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


-பிரதீபன்-

No comments

Powered by Blogger.