Header Ads



தேசப்பற்றை இந்தியர்களிடம் கற்க வேண்டும் - மலசலகூடம் இல்லை, வறுமை என்று கூறு மகிழ்ச்சியை தடுக்கக்கூடாது


தேசப்பற்று தொடர்பில் இந்திய இளைஞர்களை பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சந்திரனுக்கு சென்ற நான்காவது நாடாகிய இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,


“எமது அயல் நாடான இந்தியா சந்திரனுக்கு சென்ற நான்காவது நாடாகியமை தொடர்பில் அந்த நாட்டுக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 


அதேபோன்று இந்தியாவின் அதிஷ்டமாக இவ்வளவு செலவு செய்து சந்திரனுக்கு போகும் போது, மலசல கூடமின்றி இத்தனைபேர் இருக்கின்றனர், வறுமையில் இத்தனை பேர் இருக்கின்றனர், படிக்காதவர்கள் இத்தனை பேர் இருக்கின்றனர் என்றெல்லாம் கூறி அந்த மகிழ்ச்சியை தடுக்கும் கீழ்த்தரமான கலாச்சாரம் இந்திய இளைஞர்களிடம் இல்லை.


அது தொடர்பில் பெருமைப்பட வேண்டும். அவர்கள் எந்த இனம், குலமாக இருந்தாலும் இந்திய கொடியுடன் இந்திய தேசம் என்ற புதுமையான உணர்வுடன் இருக்கின்றனர். அதனை விடுத்து அங்குள்ள குறைகளை கூறிக்கொண்டு அதனை தடுக்கும் எண்ணத்தில் அங்குள்ளவர்கள் இல்லை.


எமது இளைஞர்களையும் இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொண்டு சந்திரனுக்கு சென்ற நான்காவது நாடான இந்தியாவுக்கு எமது வாழ்த்துக்களையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றார். 

No comments

Powered by Blogger.