Header Ads



தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்


சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் Phone அருகே தூங்க வேண்டாம் என எச்சரிக்கை அறிக்கை ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


உலகிலேயே தலைசிறந்த டெக் நிறுவனமான ஆப்பிள் அவர்களின் சாதனத்தை சார்ஜ் செய்வது எப்படி? சாட் செய்யும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? என்பது குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில் ஐபோன் பயனர்கள் சரியான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்நிறுவனமே எச்சரித்துள்ளது.


iPhone சாதனங்களை சார்ஜ் செய்யும்போது காற்றோட்டம் நிறைந்த இடத்திலோ அல்லது திறந்த வெளியாக இருக்கும் பகுதிகளோ வைத்திருக்கும்படி ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 


இதனால் ஜார்ஜ் செய்யும்போது ஆப்பிள் சாதனங்கள் சூடாவது தவிர்க்கப்பட்டு விபத்துக்கான வாய்ப்புகள் குறையும் என்கின்றனர்.


மேலும், ஐபோன் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும்போதே அதைப் பயன்படுத்துவதை பயனர்கள் அறவே தவிர்க்க வேண்டும் எனவும், சார்ஜ் ஆகும்போது ஐபோனை தலையணை அல்லது போர்வைக்கு அடியில் வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். 


அதேபோல ஆப்பிள் சாதனங்கள், சார்ஜர்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்கள் பயன்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதன் அருகே தூங்குவதை அறவே தவிர்த்திட வேண்டும் எனவும் ஆப்பிள் கேட்டுக்கொண்டுள்ளது.


குறிப்பாக ஐபோன்களுக்கு அதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சார்ஜர்கள் மற்றும் இதற உபகரணங்களையே பயன்படுத்த வேண்டும்.


அதைத் தவிர்த்து மூன்றாம் தரப்பு சார்ஜர்கள், உபகரணங்களைப் பயன்படுத்துவதை பயனர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 


இதனால் தங்களுடைய சாதனங்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அறவே தவிர்க்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது.


மக்கள் மீது கொண்ட அக்கறையினாலேயே இத்தகைய அறிவிப்பை தாங்கள் வெளியிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

No comments

Powered by Blogger.