நபிகளார் தாயிப் நகர் சென்றதை நினைத்தால், இன்றளவும் மெய்ச்சிலிர்க்கிறது (படங்கள்)
மக்கா முகர்ரமா நகரில் இருந்து கிழமேற்கு திசையில் உள்ளது தாயிஃப் நகரம். கடல் மட்டத்தில் இருந்து 1.975 மீட்டர் உயரத்தில் மலை மேல் உள்ளது இந்த நகரம்.
79.9 கிமீ தூரம் வளைந்து நெளிந்து செல்லும் செல்லும் இந்த நெடுஞ்சாலை வழியாகத் தான் பயணிக்க வேண்டும்.
இந்த சாலையின் பெயர் அல் ஹதா சாலை.
இவ்வளவு அழகான சாலைகள் வழியாக குளிர்சாதன வாகனங்களில் பயணித்து தாயிஃப் நகரை அடைவது கூட தற்போது சடைவைத் தருகிறது.
ஆனால் எவ்வித சாலை வசதி இல்லாத நிலையில் கரடு முரடான மலைப்பாதையில் இறைவனின் செய்தியை எத்தி வைக்க ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாயிஃப் நகர் சென்றதை நினைத்தால் இன்றளவும் மெய்ச்சிலிர்க்கிறது.
- முஜீபுர்ரஹ்மான் சிராஜி -
Post a Comment