இலங்கைக்கு உதவ ஓமான் இணக்கம் - தொடர்ச்சியாக ஒத்துழைக்கவும் ஒப்புதல்
நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையும் ஓமானும் இணங்கியுள்ளன.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீத் அல் ரஷ்திக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
செய்கைகளுக்கு தேவையான யூரியா உரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஓமான் அரசாங்கம் வழங்கும் ஆதரவு குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
23 million மக்கள் வாழும் ஒரு நாடு வெறுமனே 19 மில்லியன் மக்கள் மாத்திரம் வாழும நாட்டிடம் போய் யூரியாப்பிச்சை கேட்கும் இந்த விவசாய அமைச்சருக்கு வெட்கமோ மானமோ இல்லை. இந்த நாட்டின் யூரியா தேவையை முழுமையாக நிறைவு செய்து அதைவிடப் பலமடங்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பாரிய திட்டமும் அதற்கான மூலதன வாய்ப்பு வசதிகளும் எம்மிடம் உள்ளன. நாட்டு மக்களை நேசிக்கும், நாட்டை நேசிக்கும் அரசாங்கம் எம்மிடம் இருந்தால் எம்மை அணுகட்டும். ஆனால் உண்மையில் அது நடைபெறுவது சாத்தியம் குறைவு. காரணம் எமது திட்டத்தில் களவுகள், ஊழல்கள் இல்லை. அத்தகைய திட்டத்துக்கு அரசாங்கமோ அதிகாரிகளோ விருப்பமில்லை. தைரியமிருந்தால் முன்வரட்டும்.
ReplyDelete