நாட்டில் இன மோதல்களை ஏற்படுத்த சிலர் முயற்சி
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இனக்கலவரம் தொடர்பிலும் எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமிருந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தௌிவூட்டிக்கொண்டிருக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.
அரசியல் தூண்டுதல் காரணமாக நாட்டில் இனக்கலவரங்களையும் மோதல்களையும் ஏற்படுத்த சிலர் முயற்சிகளை மேற்கொள்வது புலனாவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறான குழுக்கள் தொடர்பாக பாதுகாப்பு பிரிவினரும் அரசாங்கமும் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment