Header Ads



கொழும்பிலுள்ள பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன் பதற்ற நிலை

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


குறித்த பகுதியில் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து இந்த நிலைமை பதிவாகியுள்ளது.


இந்த நிலையில் அப்பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். 


சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆரம்பமாக கொழும்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீட்டின் முன்பாக இவ்வாரம் போராட்டத்தில் ஈடுபடுவோம். 


இந்த போராட்டத்தில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும், இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துகொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.