Header Ads



கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில், கால்பதிக்கும் இலங்கை வீரர்


(அஸ்ஹர் இப்றாஹிம்)


சிறு வயது முதல் கிரிக்கெட்டில் அலாதி பிரியம் கொண்டு பல்துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவனும், கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சொலிட் வெபன் (Solid weapon) என்று அழைக்கப்படும் முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


உள்ளூரில் இவரது கிரிக்கெட் பயணம் கல்முனை லெஜெண்ட்ஸ் அணியில் தொடங்கியதுடன் அக்கழகத்தின் பல்வேறு வெற்றிக்கு அடித்தளம் இட்ட சிறந்த வீரராக திகழ்ந்தவர்.


இவரது கிரிக்கெட் விளையாட்டு மாவட்ட, மாகாண மட்டங்கள், மற்றும் தேசியத் தெரிவுகளில் முதன்மை காட்டி, கொழும்பு சாஹிரா கல்லூரி, கொழும்பு முவர்ஸ் அணி, மத்திய கிழக்கில் கட்டார் யுனைடெட் சலன்ஜர்ஸ்   அணி என கட்டார் உள்ளக போட்டிகளில் பல திறமைகளை காட்டிய சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.