Header Ads



கனடாவில் இருந்து வந்த பொதி - நாய் உணவு பொட்டலங்களிலும், பொம்மைகளுக்குள்ளும் ஆபத்தான பொருள்


கனடாவில் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருளை மஹரகம பிரதேசத்தில் போலி முகவரிக்கு பொதியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


இந்த பொதி மத்திய தபால் பரிவர்தனை நிலையத்துக்கு கடந்த மே மாதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பொதியை  யாரும்  பெற முன்வரவில்லை, அதனை மீளவும் அனுப்பாது,   அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது.


  அதன்படி, சுங்க, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாடு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இலங்கை தபால் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் பொதியை இன்று (15) திறந்தனர்.


அதில் நாய் உணவு அடங்கிய இரண்டு பொட்டலங்களிலும், பொம்மைகளுக்கு மத்தியிலும் ஹஷிஸ் மறைத்து வைக்கப்பட்டது.


இந்த ஹாஷிஷ் கஞ்சா பூக்களின் மகரந்தங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, அவை இயற்கை வாசத்தை கொண்டிருந்துள்ளது.


 இந்த பொதியில் 670 கிராம் ஹசீஸ் இருந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக பொதியை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.