Header Ads



கல்முனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில அதிரடித் தீர்மானங்கள்


(சர்ஜுன் லாபீர், ஏ.எஸ்.மெளலானா)


கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இன்று (31) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற  டியூட்டரிகளை ஒழுங்குபடுத்தும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.!


பாடசாலை நேரங்களில் டியூசன் வகுப்புகளுக்கு முற்றாகத் தடை.!

<
p style="text-align: justify;">

ஞாயிறு அஹதியா பாடசாலை நடைபெறும் நேரத்திலும் டியூசனுக்குத் தடை.!


O/L வரையான டியுசன் வகுப்புகள் மாலை 6.00 மணியுடன் முடிவுறுத்தப்பட வேண்டும்.!


இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான டியூசன் வகுப்புகளை மாத்திரம் செப்டெம்பர்-31 வரை இரவு 9.00 மணி வரை நடத்த நிபந்தனையுடன் அனுமதி.!


A/L டியுசன் வகுப்புகள் யாவும் 6.30 மணியுடன் முடிவுறுத்தப்பட வேண்டும்.


அனைத்து டியூட்டரிகளிலும் சுகாதார மற்றும் காற்றோட்ட சூழல்,


ஆண், பெண்களுக்கென தனித்தனியான மலசல கூடங்கள்,


போதிய தளபாட வசதிகள் இருத்தல் வேண்டும்.


மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.


கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, பிரதி ஆணையாளர் ஏ.எச்.எம் அஸீம் ,உட்பட துறை சார்ந்த திணைக்களங்களின் பிரதிநிகள் மற்றும் தனியார் வகுப்பு நிறுவனங்களின் நடத்துனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments

Powered by Blogger.