Header Ads



அவுஸ்திரேலியாவில் இலங்கை பிக்குவின் பாலியல் செயற்பாடு - துஷ்பிரயோகத்திற்கு பாடசாலைப் பொருட்கள் பயன்பாடு


அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை பௌத்த விகாரையின் தலைவர் நாவோதுன்னே விஜித தேரருக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


68 வயதான அவர் இன்று (18) மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மெல்பேர்னின் தென்கிழக்கில் உள்ள தம்ம சரண இலங்கை பௌத்த விகாரையின் பிரதம அதிபதியான இவர், நூற்றுக்கணக்கான சிறுவர்கள் படிக்கும் ஞாயிறு பாடசாலையை நடத்தி வந்துள்ளார்.


இந்நிலையில், சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணைகள் நவம்பர் 10 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


16 வயதுக்குட்பட்ட குழந்தையுடன் அநாகரீகமாக நடந்து கொண்டது உட்பட 13 குற்றங்களின் கீழ் சந்தேகநபர் மீது பாலியல் குற்றப்பிரிவு துப்பறியும் அதிகாரிகளால் புதன்கிழமை குற்றம் சாட்டப்பட்டது.


1996 மற்றும் 2004 க்கு இடையில் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோவில் உள்ள விகாரைகளில் தனது பணியின் மூலம் சந்தித்த மூன்று குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.


சில துஷ்பிரயோகங்களைச் செய்வதற்கு நாதுன்னே இளஞ்சிவப்பு அழிப்பான் மற்றும் தெளிவான பிளாஸ்டிக் ரூலர் உள்ளிட்ட பாடசாலைப் பொருட்களைப் பயன்படுத்தியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


விசாரணையின் போது அவர் மிகவும் அமைதியான முறையில் இருந்தார். இதனையடுத்து புதிய நீதிமன்ற திகதிகள் நியமிக்கப்பட்டன.


அவர் 1993 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஸ்பிரிங்வேல் விகாரையில் வசிப்பிடத் துறவியாகப் பணியாற்றினார், 2001 இல் கீஸ்பரோ விகாரைக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொள்ளும் "மிகவும் வெற்றிகரமான ஞாயிறு பாடசாலையை" அவர் நடத்தி வந்துள்ளார்.


"குழந்தைகளுடனான அவரது நல்லுறவு மற்றும் புகழ் மிகவும் குறிப்பிடத்தக்கது" என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.