சண்டி என அழைக்கப்படும், இலங்கையின் விசித்திரமான யானை
2019 ஆம் ஆண்டு குருணாகல் கல்கமுவ கிராமத்தில் வைத்து பிடித்து ஹொரவப்பொத்தானை யானைகள் காப்பகத்தில் கொண்டு விடப்பட்ட சண்டி என அழைக்கப்படும் இந்த காட்டு யானை அங்குள்ள பாதுகாப்பு மின்வேலிகளை உடைத்து காப்பகத்திலிருந்து வௌியேறி மீண்டும் கல்கமுவவை வந்தடைந்துள்ளது.
ஒற்றை தந்தமுடைய இந்த யானை 2008 ஆம் ஆண்டில் கல்கமுவ கல்லேவ பகுதியில் பிடிக்கப்பட்டு சோமாவதி சரணாலயத்தில் கொண்டு போய் விடப்பட்டாலும் மீண்டும் கல்கமுவவை வந்து சேர்ந்துள்ளது.
யானையின் கழுத்துப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த GPS சமிக்ஞை மூலம் தகவல்கள் பதிவாகியிருந்தன.
பின்னர் 2015 ஆம் ஆண்டு ஹொரவப்பொத்தானை யானைகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஒற்றை தந்தமுடைய இந்த யானை சில மாதங்கள் கழித்து மீண்டும் கல்கமுவவை வந்தடைந்துள்ளது.
தற்போது இந்த யானையின் கண்பார்வை தற்போது குன்றியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
யானையின் உயிருக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் அதனை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment