Header Ads



சீனக் கப்பலை முந்திக்கொண்டு, இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்


சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது.


 Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடலில் சுமார் 17 நாட்கள்  நங்கூரமிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று (25) மாலை தெற்கு சீனாவில் உள்ள சுஜியாங் கடற்பரப்பில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருந்தது.


இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள  நிலையில், அதற்கு முன்னதாக இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளது.


இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன. 


இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உள்ளிட்டோருடன் கலந்துரையாடவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்போது, திருகோணமலைக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் விஜயம் செய்யவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் அமைக்கப்படவுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணத்தையும் அவர் பார்வையிடவுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் செய்திருந்தபோது, எண்ணெய்க் குழாய் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், பாலம் அமைப்பது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.


திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான உடன்படிக்கையும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.