Header Ads



கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த, மாணவனின் துயரமான முடிவு - பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள்


கிளிநொச்சியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன், தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இச்சம்பவத்தில் 22 வயதான சந்திரமோகன் தேனுஜன் என்ற மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துள்ளார். 


கிளிநொச்சியில் விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் இன்றைய தினம் (19-08-2023) தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 கல்வி பொதுத் தாரதர உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்றவர் இவர்.


மொரட்டுவ பல்கலைகழக அனுமதி கிடைத்து, அங்கு கல்வி கற்க சென்றிருந்தார்.


இருப்பினும், இந்த ஆண்டில் தன்னால் கல்வியை தொடர சிரமமாக இருப்பதாக குறிப்பிட்டு, அடுத்த வருடத்திலிருந்து பல்கலைகழக கல்வியை தொடர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.


மன அழுத்தத்திற்கான மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.


மேலும் குறித்த மாணவனின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.