Header Ads



இன்று கோடிக்கணக்கான ரூபாய்க்கு, விற்பனையான மாணிக்கக்கல்


இரத்தினபுரியில் இன்று (16) மிக அதிக விலைக்கு மாணிக்கக்கல் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.


நீல நிற மாணிக்கம் ஒன்றே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


43 கோடி ரூபாவிற்கு மாணிக்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கஹவத்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் இருந்து இந்த மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த மாணிக்கம் தொண்ணூற்றொன்பது காரட்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.