இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம்
விசா பெற, நிரந்தர வேலை அல்லது பணி அனுபவத்தை உறுதிப்படுத்த, வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, அத்துடன் பல்வேறு அரசு, அரை-அரசு மற்றும் சட்டரீதியான கொள்முதல் நடைமுறைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, பணி அனுபவம் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை போன்ற உண்மைகளை உறுதிப்படுத்தவும் இந்த போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப
வெளிநாட்டு தூதரகங்களில் சில தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதி தொடர்பான ஆவணங்கள் மத்திய வங்கியின் ஊழியர் ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்திற்கு பரிசோதிக்க சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆவணங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, அதில் போலியான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் நிதி திணைக்களத்தினால் அடையாளம் காண முடிந்தது.
போலியான ஆவணம்
ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலியான ஆவணங்களை தயாரித்தல் சட்டவிரோதமான செயற்பாடாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என நிதி திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment